follow the truth

follow the truth

July, 10, 2025
Homeஉள்நாடு50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் பறிமுதல்

Published on

கார்ட்போர்ட் பெட்டிக்குள் மிக சூட்சுமமாக மறைத்து கொண்டுவரப்பட்ட 50 மில்லியன் ரூபா பெறுமதியான போதை மாத்திரைகள் , இலங்கை சுங்கப் பிரிவினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தபால் மதிப்பீட்டுப் பிரிவிற்கு கிடைத்த தபால் பொதியொன்றை சோதனைக்கு உட்படுத்திய போதே இந்த போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தனியார் பாவனைக்கான பொருட்கள் அடங்குவதாகக் குறிப்பிடப்பட்டு இந்த பொதி ஜெர்மனியிலிருந்து அங்கொடை பகுதியில் வசிக்கும் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

குறித்த பொதியினுள் கார்ட்போரட் பெட்டியொன்றினுள் மிகவும் நுட்பமான முறையில் பொதியிடப்பட்ட 2,387 கிராம் நிறையுடைய 4,956 மெத்தபெட்டமின் எனப்படும் போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள் சுமார் 49.56 மில்லியன் ரூபா பெறுமதி என சுங்க ஊடகப் பேச்சாளரும் பணிப்பாளருமான சுதத்த சில்வா தெரிவித்தார்.

இது தொடர்பிலான ஆரம்பகட்ட விசாரணைகளின் பின்னரான அடுத்தகட்ட விசாரணைகளுக்காக கைப்பற்றப்பட்ட போதை வில்லைகள் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பால் தேநீரின் விலை அதிகரிப்பு

. பால் தேநீர் ஒன்றின் விலை 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இறக்குமதி...

இதுவரை இல்லாத உச்சத்தை எட்டிய கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் நேற்று(09) 18,161.49 புள்ளிகளாக முடிவடைந்து, இதுவரை இல்லாத உச்சத்தை...

அமெரிக்கா விதித்த புதிய வரி – அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதி கலந்துரையாடல்

அமெரிக்காவால் விதிக்கப்பட்ட புதிய 30% தீர்வை வரி தொடர்பாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இன்று (10) காலை...