21 பிரிவுகளில் டெங்கு அபாயம்

197

 21 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அதி அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளன.

இவற்றில் 09 பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் பதிவாகும் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

பிலியந்தலை, ஹாரிஸ்பத்துவ, உக்குவெல, பதுளை, கேகாலை மற்றும் மாவனெல்ல ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் புதிதாக இனங்காணப்பட்டுள்ள அதிக ஆபத்துள்ள பிரதேசங்களாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு அறிவித்துள்ளது.

இவ்வருடத்தின் 43ஆவது வாரத்தில் கொழும்பு மாவட்டத்தில் அதிகூடிய டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் 143 பேர் டெங்கு காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் கொழும்பு மாவட்டத்தில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 7,296 ஆக இருந்த போதிலும், இந்த வருடம் அந்த எண்ணிக்கை 14,937 ஆக அதிகரித்துள்ளது.

இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் இலங்கையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62,435 ஆக அமைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here