follow the truth

follow the truth

May, 14, 2024
Homeஉள்நாடுஅனைத்து அரசியல் கட்சிகளும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்!

அனைத்து அரசியல் கட்சிகளும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு முன்னுரிமை கொடுங்கள்!

Published on

கடந்த 24 மாதங்களில் குறைந்தது 17 சிறுவர்களாவது பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சிறுவர் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை தமது அரசியல் நிகழ்ச்சி நிரல்களில் நடைமுறைப்படுத்துமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உட்பட இலங்கையிலுள்ள அனைத்து அரசியல்வாதிகளையும் ‘Stop Child Cruelty Trust’ மற்றும் Child Protection Alliance கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சிறுவர் துஷ்ப்ரயோகங்களை நிறுத்து அறக்கட்டளையின் நிறுவன தலைவர் வைத்தியர் துஷ் விக்கிரமநாயக்க இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே குறித்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

“குழந்தை உரிமைகள் அரசியலாக்கப்பட வேண்டும். எந்தவொரு குறிப்பிட்ட கட்சி அல்லது நிறத்தால் அல்ல. ஆனால் சகல அரசியல் நிகழ்ச்சி நிரல்களிலும் சிறுவர் பாதுகாப்பு உள்ளடக்கப்பட வேண்டிய காலகட்டம் இது, என வைத்தியர் துஷ் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் உரிமைகள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு பிரச்சினையை முன்னணியில் வைத்து 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் வேண்டுகோள் விடுத்து, நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் விவாதிக்க வேண்டும் எனவும் அனைத்து அரசியல் கட்சிகளுடன் இது தொடர்பில் கலந்துரையாடுமாறும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் தாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளதாக வைத்தியர் துஷ் விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும் அனைத்து மட்டங்களிலும் இந்த பிரச்சினைக்கு முன்னுரிமை அளிப்பதாகவும்
SLPP நிகழ்ச்சி நிரலிலும் இதை சேர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ‘Stop Child Cruelty Trust’ மற்றும் Child Protection Alliance க்கு உறுதியளித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

காலநிலை தாக்கம் இல்லாவிட்டால் தேயிலை உற்பத்தியில் சாதனை செய்ய முடியும்

”இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இந்த நிறுவனம் மிகவும் முக்கியமானதாகும்எனவும் இங்கு நல்ல கல்வி வழங்குவதற்கான சூழல் உள்ளது....

கல்வி நிர்வாக மறுசீரமைப்புக்கான சுற்றுநிருபம் விரைவில்

கல்வி நிர்வாக சீர்திருத்தத்தின் ஆரம்ப கட்டமாக நாடளாவிய ரீதியில் 1220 கொத்தணிப் பாடசாலைகள் உருவாக்கப்படுவதுடன், அவற்றைக் கண்காணிக்க 350...

வர்த்தமானி குறித்து இதுவரை முறைப்பாடுகள் கிடைக்கவில்லை

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பளத்தை வழங்குவது தொடர்பில் வெளியிடப்பட்ட வர்த்தமானி குறித்து பெருந்தோட்ட நிறுவனங்களிடமிருந்து இதுவரையில் எவ்வித...