சட்டமா அதிபரின் அறிவுறுத்தலின் பின்னர் உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் – தேர்தல்கள் ஆணைக்குழு

243

சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய உள்ளுராட்சி மன்ற தேர்தல் குறித்து அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளுராட்சி பிரதேச எல்லை நிர்ணயத்திற்காக நியமிக்கப்பட்ட தேசிய குழுவின் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு உள்ளுராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் சட்டமா அதிபரிடம் ஆலோசனை பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில், இந்த விடயம் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டு, சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

தற்போது, ​​உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சட்டப்பூர்வ அதிகாரம் உள்ளது.

ஆனால் அண்மையில் நியமிக்கப்பட்ட உள்ளூராட்சிப் பிரிவுகளை எல்லை நிர்ணயம் செய்வதற்கான தேசியக் குழு அந்தச் செயற்பாடுகளை பாதித்துள்ளதாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுக்கொள்வது அவசியமானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here