நடுத்தர மக்கள் மிக மோசமான பாதிக்கப்படுவார்கள் – கப்ரால்

652

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை அமுல்படுத்துவதால் சமூக கட்டமைப்பில் ஏற்படும் பாதிப்பை அரசாங்கம் மூடி மறைப்பது கவலையளிப்பதாக மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் கடுமையான நிபந்தனைகளை செயற்படுத்தினால் நடுத்தர மக்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்க்கொள்வார்கள் என்றும் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்தார்.

அவர்களின் கடுமையான நிபந்தனைகளுக்கு அமைய தற்போது வரி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பன்மடங்கு வரி அதிகரிக்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

நிதியைப் பெறுவதற்கான இறுதிக்கட்ட இணக்கப்பாட்டை எடுப்பது எதிர்வரும் மார்ச் மாதம் வரை தாமதமாகும் என்றும் இறுதி ஆறு மாதத்திற்குள், 691 பில்லியன் நாணயம் அச்சிடப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

குறுகிய அரசியல் நோக்கத்திற்காக பொருளாதாரத்தை தாம் நெருக்கடிக்கு தள்ளியதாக குற்றம் சாட்டியவர்கள் இன்று பொருளாதாரத்தை பாதிப்பிற்குள்ளாக்கியுள்ளார்கள் என்றும் அஜித் நிவார்ட் கப்ரால் குற்றம் சாட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here