follow the truth

follow the truth

May, 15, 2024
Homeஉள்நாடுவடகொழும்பு யுனைட்டெட் - District 306 பி 1 அரிமா சங்கத்தினரால் இலவச மருத்துவ முகாம்

வடகொழும்பு யுனைட்டெட் – District 306 பி 1 அரிமா சங்கத்தினரால் இலவச மருத்துவ முகாம்

Published on

வடகொழும்பு யுனைட்டெட் – District 306 பி 1 அரிமா சங்கத்தினரால் தேசிய நீரிழிவு தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ பரிசோதனைகள் மற்றும் இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு கொழும்பு 15 மட்டக்குழி புனித மேரிஸ் தேவாலயத்தில் வைத்து மக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது

No description available.

No description available.

இந்நிகழ்வானது அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் லயன் வைத்தியர் அனோமா விஜேசிங்க MJF அவர்களின் தலைமையில் ஏனைய அரிமா சங்க அங்கத்தினர்களின் பங்களிப்புடனும் இரண்டாவது பிரதி மாவட்ட ஆளுநர் லயன் டபிள்யூ ராஜித ரொட்ரிகோ அவர்களின் முன்னிலையில் நூற்றுக்கும் மேற்பட்ட குறைந்த வருமானங்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தேவையுடையவர்களுக்காக நடாத்தப்பட்டது.

No description available.

No description available.

மேலும் இந்நிகழ்வில் இலவச நீரழிவு பரிசோதனை இரத்தப் பரிசோதனைகள் கண் பரிசோதனை மற்றும் இலவச மூக்கு கண்ணாடிகள் வழங்குதல் போன்ற நிகழ்வுகளும் இடம் பெற்றது.

No description available.

இதன் போது கருத்து தெரிவித்த அரிமா சங்கத்தின் மாவட்ட ஆளுநர் லயன் வைத்தியர் அனோமா விஜேசிங்க MJF,

“எமது அரிமா சங்கம் மூலமாக யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு வரை பல்வேறுபட்ட சமூக சேவைகளை செய்து வருவதோடு இதுபோன்ற இலவச வைத்திய முகாம்கள் இலவச மூக்கு கண்ணாடி வழங்கும் வைபவங்கள் போன்றவை இந்த மாதம் முழுவதும் செய்வதற்கு நாங்கள் உத்தேசித்து உள்ளோம் அந்த வகையில் இன்று நடைபெறுகின்ற இந்த நிகழ்வை தொடர்ந்து வத்தலை நீர் கொழும்பு போன்ற பிரதேசங்களிலும் நாங்கள் இதனை தொடர்ந்து செய்வதற்கு உத்தேசித்து உள்ளோம் ஆகவே தேவையுடையவர்கள் எங்களை தொடர்பு கொண்டு இந்த சேவைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்” என்று தெரிவித்தார்.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” – நிர்மாணப் பணிகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பணிப்புரை

நாட்டில் முஸ்லிம் மக்களுக்காக அளப்பரிய சேவைகளையாற்றிய தலைசிறந்த அரசியல்வாதியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான மர்ஹூம்...

ஊழல் ஒழிப்பை அரசியல் கோசமாகக் பயன்படுத்தும் யுகம் முடிவுக்கு வரும்

அரசாங்கம் திருடர்களைப் பாதுகாப்பதாக சிலர் குற்றம் சுமத்தினாலும் தற்போதைய அரசாங்கம் திருடர்களைப் பிடிப்பதற்காக சட்டங்களை கொண்டு வந்துள்ளதாகவும் ஊழல்...

மழையுடனான காலநிலை – ஆறுகளின் நீர்மட்டம் அதிகரிப்பு

நாட்டில் நிலவும் மழையுடனான காலநிலையை அடுத்து ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றன. களு கங்கை மற்றும் வளவ கங்கை...