நாங்கள் ஒதுக்கப்பட்ட சமூகம் அல்ல – ஜீவன் (VIDEO)

239

வெளிநாட்டில் இலங்கையர் ஒருவர் இறந்தால் ஒட்டுமொத்த நாடும் கண்ணீர் விடுகிறது.ஆனால் அண்மையில் மலையகத்தில் மின்சாரம் தாக்கி ஒருவர், இறந்தார்.அதே போன்று கடந்த வாரம் இருவர் இவ்வாறு உயிரிழந்தனர்.இதை யாரும் கண்டுகொள்ளவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்

மேலும் , இன்று நான் சபையில் அவதானித்தேன் ,பாதிக்கப்பட்ட மக்கள்,ஒதுக்கப்பட்ட மக்கள்.பாவம் என்று மலையக மக்களை ஒதுக்கி பேசிக்கொண்டு இருக்கிறார்கள்.நாங்கள் ஒதுக்கப்பட்ட சமூகம் அல்ல.

நாம் மலையகத்தில் மட்டும் வாழவில்லை.நாடு முழுவதும் வாழ்கின்றோம்.எம்மில் பலர் மருத்துவர்களாக ,பொறியியலாளர்களாக ,உயர்ந்த பதவிகளில் உள்ளனர்.

மலையக பிள்ளைகள் பாடசாலை செல்வதை குறைத்துள்ளனர் என்று கூறினீர்கள்.சுமார் 728 பாடசாலைகள் அடிப்படை வசதி இல்லாமல்,கூரை கூட இல்லாமல் இருக்கின்றன.எப்படி அங்கே சென்று படிப்பது என நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் சபையில் கேள்வியெழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here