அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கு காரணம் – ஜனாதிபதி

344

அபிவிருத்தியடைந்த நாடுகளின் கட்டுப்பாடற்ற தொழில்மயமாதலே காலநிலை மாற்றத்திற்கான அடிப்படைக் காரணம் என்றும், இதன் விளைவுகளையே வறிய நாடுகள் அனுபவிக்க நேரிட்டுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

எகிப்தில் நடைபெற்று வரும் காலநிலை மாற்றம் தொடர்பான கோப் 27 மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி, போதுமான நிதி இல்லாததால் வறிய நாடுகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

இதன் விளைவாக, இந்த நாடுகள் தங்கள் மக்களின் வாழ்க்கைத் தரத்தைப் பாதுகாக்க போராடும் அதேவேளையில் பொருளாதார ரீதியாக முன்னேறவும் போராடுவதனால், இந்த நாடுகள் இரட்டை ஆபத்தை எதிர்கொண்டிருப்பதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

எனவே, வளர்ச்சியடைந்து வரும் நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள இழப்பு மற்றும் சேதங்களுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் தமது நிதியை இரட்டிப்பாக்குவதன் மூலம் அபிவிருத்தியடைந்த நாடுகள் கிளாஸ்கோவில் வழங்கிய உறுதி மொழியை நிறைவேற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

காலநிலை தொடர்பான பாதிப்புகளை அடையாளப்படுத்தும் பேரவையால் முன்மொழியப்பட்டதற்கமைய, எதிர்கால சவால்களுக்கு பதில் வழங்கக்கூடியவாறு சர்வதேச விழிப்புணர்வை வலுப்படுத்தும் வகையில் விசேட அறிக்கையை உருவாக்குவது பொருத்தமானதாக இருக்கும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here