follow the truth

follow the truth

June, 2, 2024
Homeஉள்நாடு26,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

26,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்க நடவடிக்கை

Published on

தற்போது அரச சேவையில் உள்ள பட்டதாரிகளுக்கு  டிசம்பர் மாத நடுப்பகுதியில் பொது பரீட்சையொன்றை நடத்தி, அவர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

2018 முதல் 2021 ஆம் ஆண்டு வரை அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக சேவையில் உள்வாங்கப்பட்ட நிலையில், பணிகளுக்கு அமர்த்தப்படாத மேலதிக ஊழியர்களை இவ்வாறு ஆசிரியர் சேவையில் இணைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்றத்தில் இன்று சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார்.

26,000 ஆசிரியர்களை சேவையில் இணைக்கும் நோக்கில் பொது போட்டிப் பரீட்சை நடத்தப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

மேலும்  பொது அறிவு மற்றும் உளநல பரீட்சைகளின் புள்ளிகள் அடிப்படையில், ஆசிரியர் குறைபாட்டை நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

LATEST NEWS

MORE ARTICLES

சில்லறைத்தனமான அரசியல் நடவடிக்கைகள் எமது பக்கத்தில் இல்லை

ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் சகல அரச கொடுக்கல் வாங்கள்களும் வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுக்கப்படும் எனவும் ஐக்கிய மக்கள்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் தற்காலிகமாக மூடப்பட்ட வீதி

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிப்பன்ன வெளியேறும் பாதை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த பகுதியில்...

முதற்தடவையாக Park & Ride சேவை அறிமுகம்

இலங்கை ரயில்வே திணைக்களத்தினால் முதற்தடவையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள Park & Ride சேவை அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் பாதுக்கை...