வெளிநாடு செல்லும் பணியாளர்களுக்காக இலவச ஆங்கில மொழிப் பயிற்சி
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் (SLBFE) வெளிநாடு செல்லும் இலங்கை பணியாளர்களுக்காக, ஆங்கில மொழித் பயிற்சி திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் மற்றும் சேஃப் பவுண்டேஷன் உடன் இணைந்து வேலை வாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்புபவர்களுக்கு இலவசமாக ஆங்கில மொழி பயிற்சி வகுப்புகளை நடத்துகிறது.
தங்காலை, பன்னிபிட்டிய, இரத்தினபுரி, அனுராதபுரம் மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக பயிற்சி நிலையங்களில் ஆங்கில மொழிப் பாட வகுப்புகள் நடத்தப்படவுள்ளன.
இந்த ஆங்கில மொழிப் பயிற்சித் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் எதிர்வரும் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.