வெளிநாட்டில் உயிரிழந்த இலங்கைப் பெண் : காணொளியை நீதிமன்றில் சமர்ப்பிக்க ஜப்பான் அரசு இணக்கம்!

869

தடுப்புக்காவலில் இருந்தபோது உயிரிழந்த இலங்கைப் பெண் விஷ்மா சந்தமாலியின் (Wishma Sandamali) இறுதி நாட்களைக் காட்டும் சிசிடிவி காணொளியின் ஒரு பகுதியை ஜப்பானின் நகோயா மாவட்ட நீதிமன்றில் சமர்ப்பிக்க ஜப்பான் அரசு முடிவுசெய்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

விசா காலாவதியான நிலையில் கடந்தவருடம் ஜப்பானின் நாகோயாவில் அமைந்துள்ள குடிவரவு தடுப்பு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 33 வயதான விஷ்மா (Wishma Sandamali) கடந்த மார்ச் 06 ஆம் திகதி உயிரிழந்தார்.

அங்கு அவருக்கு வழங்கப்பட்ட உணவு குறித்து அவர் தொடர்ந்து முறைப்பாடு அளித்ததாகவும், அந்த உணவினால் அவர் பலவீனமடைந்து உயிரிழந்ததாகவும் கூறப்படுகின்றது.

இந்நிலையில் ஆறு சந்தர்ப்பங்களில் மருத்துவர்கள் விஷ்மாவை பரிசோதித்ததாகவும், குறைந்தபட்சம் அவர் இரண்டு முறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் குடிவரவு அதிகாரி தெரிவித்ததாக தூதரக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார்.

இந் நிலையில் விஷ்மா இறப்பதற்கு முன்னர் அவரை தடுத்து வைத்திருந்த அறையில் உள்ள சிசிடிவியின் முழுமையான காணொளியை நீதிமன்றில் சமர்ப்பிக்க குடிவரவு அதிகாரிகளுக்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என விஷ்மாவின் சகோதரி நீதிமன்றம் ஊடாக கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இவ்வாறான நிலையில் நீதிமன்றத்தின் சமீபத்திய கோரிக்கை அமைய குறித்த சிசிடிவி காணொளியை நீதிமன்றில் சமர்ப்பிக்க ஜப்பான் அரசு இணங்கியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here