நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை திருத்தச் சட்டமூலம் திருத்தமின்றி இன்றைய தினம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த திருத்தச் சட்டமூலம் இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தலைமையில் நேற்று (21) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற வர்த்தக அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இதற்கான வழங்கப்பட்டது.
இந்தத் திருத்தச் சட்டமூலம் தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 19 ஆம் திகதி வெளியிடப்பட்டது.
அதற்கமைய, நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்காக இன்று (22) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் சில பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலையை குறிப்பிட்டு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டது
அதன்பின்னர், அந்தக் கட்டுப்பாட்டு விலையில் பொருட்களை விற்பனை செய்யாத வர்த்தகர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை இந்த திருத்தச் சட்டமூலத்தின் அதிகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.