follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉலகம்சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி : அமுலுக்கு வந்துள்ளது உச்ச நீதிமன்ற உத்தரவு

சபரிமலைக்கு பெண்கள் செல்ல அனுமதி : அமுலுக்கு வந்துள்ளது உச்ச நீதிமன்ற உத்தரவு

Published on

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இதுவரை இல்லாத வகையில் 10 முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்களை அனுமதிக்கும்படி கடந்த 2018 ஆம் ஆண்டு இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்றன.

இந்திய உச்ச நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் கோவில் நடை திறக்கப்பட்டபோது, 10 வயது முதல் 50 வயதுக்குட்பட்ட பெண்கள் பலர், சபரிமலைக்கு செல்வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர்.

ஆனால், பக்தர்களின் கடும் எதிர்ப்பு போராட்டங்கள் காரணமாக அவர்களால் செல்ல முடியவில்லை.

பின்னர், உத்தரவுக்கு எதிர்ப்பு மற்றும் கொரோனா பரவல் காரணமாக இதுவரை அமுல்படுத்தப்படாமல் இருந்த உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு தற்போது அமுலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்க வேண்டும் என பொலிஸாருக்கு கேரள அரசு அறிவுறுத்தியுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய 10 வருட ‘ப்ளூ ரெசிடென்சி’ விசாவை அறிவித்தது

சுற்றுசூழல் சட்டத்தரணிகளுக்கு நீண்ட கால வதிவிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. ‘ப்ளூ ரெசிடென்சி’ (Blue Residency) என்று அழைக்கப்படும்,...

ஐரோப்பிய ஒன்றிய விசாரணையில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம்

மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான தளங்கள் குழந்தைகளுக்கு அடிமையாக்கும் நடத்தையை ஏற்படுத்துகின்றன என்ற சந்தேகத்தின் பேரில் ஐரோப்பிய ஒன்றியம் பேஸ்புக்...

இஸ்ரேலுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றம் சென்ற தென்னாப்பிரிக்கா

ராஃபா எல்லையில் தஞ்சமடைந்துள்ள பலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியுள்ள நிலையில், இந்த தாக்குதலை நிறுத்த இஸ்ரேலுக்கு...