follow the truth

follow the truth

May, 17, 2024
HomeTOP1இலங்கை – தென்ஆபிரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு !

இலங்கை – தென்ஆபிரிக்க ஜனாதிபதிகள் சந்திப்பு !

Published on

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிறில் ரமபோஷா நேற்று (16) இலங்கைக்கு விஜயம் செய்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு விடயங்கள் குறித்து உரையாடியனார்.

No description available.

ஜி 20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்டு, நாடு திரும்பும் வழியிலேயே அவர் இலங்கைக்கு மிக குறுகிய நேர விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

No description available.

இதற்கமைய இரு நாட்டு தலைவர்களுக்குமிடையிலான கலந்துரையாடல் கட்டுநாயக்கவிலுள்ள விமானப்படை தளத்தில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது பொருளாதார ஒத்துழைப்பு, முதலீடு, இலங்கையில் சுற்றுலாத்துறையை விரிவுபடுத்தல் ஆகிய விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன

No description available.

விசேடமாக, சமூகங்களிடையே நீடித்து நிலைக்கக்கூடிய நல்லிணக்கத்தை அடைவதற்கான நம்பகத் தன்மையுடனான உண்மையை கண்டறியும் பொறிமுறையை உருவாக்குவதற்காக தென்னாபிரிக்காவின் உதவி, ஆலோசனை மற்றும் அறிவுரைகளைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டது.
இரு நாட்டுத் தலைவர்களும் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டார்கள்.

No description available.

No description available.

வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க மற்றும் இரு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No description available.

LATEST NEWS

MORE ARTICLES

புதிய நகரத் திட்டத்திற்கு மக்களை கொல்லவும் சவூதி அனுமதி?

சவூதி அரேபியாவின் நியோம் திட்டத்திற்காக உள்ளூர் கிராம மக்களை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்ற மரணம் விளைவிக்கும் ஆயுத...

நாடே எதிர்பார்த்திருந்த ரதுபஸ்வல வழக்கின் தீர்ப்பு வெளியானது

வெலிவேரிய, ரத்துபஸ்வல பிரதேச மக்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தின் போது 3 பேர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில் முன்னாள்...

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புதிய 10 வருட ‘ப்ளூ ரெசிடென்சி’ விசாவை அறிவித்தது

சுற்றுசூழல் சட்டத்தரணிகளுக்கு நீண்ட கால வதிவிடத்தை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்துள்ளது. ‘ப்ளூ ரெசிடென்சி’ (Blue Residency) என்று அழைக்கப்படும்,...