follow the truth

follow the truth

July, 31, 2025
Homeஉள்நாடுஇலங்கை பெண்கள் விற்பனை- ஓமானிய தூதரக அதிகாரி பணிநீக்கம்

இலங்கை பெண்கள் விற்பனை- ஓமானிய தூதரக அதிகாரி பணிநீக்கம்

Published on

சுற்றுலா விசா ஊடாக ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனைச் செய்யப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலங்கைக்கான ஓமானிய தூதரகத்தில் பணியாற்றும் இரண்டாம் நிலை உயரதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் அவர் இலங்கைக்கு அழைக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

சுற்றுலா விசாவை பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்த கடத்தல் சம்பவத்தில் இலங்கையின் விமான நிலையத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் தொடர்பு கொண்டுள்ளதாகவும், ஓமானில் பணியாற்றும் தூதரக அதிகாரி ஒருவர் சம்பந்தப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.

இதன் அடிப்படையிலேயே ஓமானில் பணியாற்றும் இலங்கை தூதரக அதிகாரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜூலை 2025 மாதத்திற்கான பணவீக்கம் -0.3% ஆக உயர்வு

நாட்டின் தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் (NCPI) அடிப்படையில், பணவீக்கம் ஜூலை 2025 இல் -0.3% ஆக உயர்ந்துள்ளதாக...

எம்.பி. ரோஹித அபேகுணவர்தனவின் மகள் ரொஷேல் பிணையில் விடுவிப்பு

சட்டவிரோதமாக போலி ஆவணங்களை பயன்படுத்தி சொகுசு கார் பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்...

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க தீர்மானம்

பொலிஸ் சேவையில் 1,000 பெண் உத்தியோகத்தர்களை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இது தொடர்பான...