follow the truth

follow the truth

May, 15, 2025
Homeஉள்நாடுகடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவிப்பு

கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என மீனவர்களுக்கு அறிவிப்பு

Published on

வங்காள விரிகுடாவின் தென்கிழக்கு பிரதேசத்திற்கு இன்று (18) முதல் எதிர்வரும் 21ஆம் திகதி வரை கடற்றொழிலுக்கு செல்வதை தவிர்க்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

குறித்த பகுதியில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அல்லது பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலிலும் அதனை அண்டிய வடக்கு அந்தமான் கடற்பிராந்தியத்திலும் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை (19) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற்றமடையலாமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாட்டின் வடக்கு கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் அதிகம் காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதனால் வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணிக்கு 60 கிலோமீட்டர் வரை அதிகரித்து வீசுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறை தொடக்கம் முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளில் 2 தொடக்கம் 3 மீட்டர் வரை கடல் அலைகள் மேல் எழலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மீனவர் ஓய்வூதியத் திட்டம் விரைவில்

மீனவர் ஓய்வூதியத் திட்டம் இந்த ஆண்டு செயல்படுத்தப்படும் என்று மீன்வள அமைச்சகம் தெரிவித்துள்ளது. மீன்வளச் சட்டத்தில் திருத்தம் செய்ய நடவடிக்கை...

ஹர்ஷான் டி சில்வா கைது

காணி மீட்பு மற்றும் அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ஹர்ஷான் டி சில்வா, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால்...

நற்சான்று பத்திரங்களை கையளித்த புதிய தூதுவர்கள்

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார...