பயங்கரவாத தடைச்சட்டத்தை இடைநிறுத்த நியாயமான நடவடிக்கை அவசியம்!

404

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பிரயோகத்தை நிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

அத்தோடு அதற்குப் பதிலாக உருவாக்கப்படும் புதிய சட்டமும் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு உட்பட்டவையாக அமைய வேண்டும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த சட்டத்தின் பிரயோகத்தினால் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பாலும் தமிழ், முஸ்லிம் மக்கள் அல்லது அரசாங்கத்தை விமர்சிப்பவர்களாகவோ இருக்கின்றார்கள் என்றும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்டத்தை முழுமையாக நீக்குவதாக வாக்குறுதியளித்த ரணில் விக்ரமசிங்க, தனது அதிகாரத்தை பயன்படுத்தி மாணவர்களை பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்துவைப்பதற்கு உத்தரவிட்டிருப்பது குறித்தும் அதிருப்தி வெளியிட்டுள்ளது.

எனவே, பயங்கரவாத தடைச்சட்டத்தின் பிரயோகத்தை இடைநிறுத்துவதற்கான நியாயமான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here