துரித உணவின் விலை உயர்வால் நன்மை

1007

சந்தையில் துரித உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்புடன் சிறுவர்கள் அதனை பயன்படுத்துவது குறைந்துள்ளதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் ஊட்டச்சத்து பிரிவின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ரேணுகா ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

துரித உணவுப் பாவனை குறைவடைந்துள்ள நிலையில், நீரிழிவு போன்ற தொற்றாத நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளின் எண்ணிக்கையில் பாரியளவில் குறைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைக்கும் தன்மை குறித்த தரவுகளை சேகரிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்தை உறுதி செய்யும் நோக்கில், இந்த தரவு சேகரிப்பு நடவடிக்கைகள் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here