follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடு2023 வரவு செலவுத் திட்டம் : 6 ஆம் நாள் விவாதம் இன்று

2023 வரவு செலவுத் திட்டம் : 6 ஆம் நாள் விவாதம் இன்று

Published on

2023 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பின் 6 ஆம் நாள் விவாததிற்காக நாடாளுமன்றம் இன்று காலை 9.30 மணிக்கு கூடவுள்ளது.

 

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பமானது.

 

2023 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த திங்கட்கிழமை சமர்ப்பித்தார்.

2023 வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளின்படி, மொத்த வருவாய் மற்றும் மானியங்கள் 3,415 பில்லியன்களாகவும் மொத்த செலவு 5,819 பில்லியன் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, வரவு செலவுத் திட்டப் பற்றாக்குறையை இந்த ஆண்டு மதிப்பிடப்பட்ட 9.8 சதவீதத்திலிருந்து அடுத்த ஆண்டு 7.9 சதவீதமாகக் குறைக்க அரசாங்கம் இலக்கு வைத்துள்ளது.

இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நாளை நாடாளுமன்றத்தில் இடம்பெறவுள்ளது.

குழுநிலை விவாதம் நவம்பர் 23ஆம் திகதி முதல் 13 நாட்கள் நடைபெறவுள்ள நிலையில் வரவு செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு டிசம்பர் 8ஆம் திகதி நடைபெறவுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...