follow the truth

follow the truth

June, 17, 2025
Homeஉள்நாடுமாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை - ஆசிரியர் கைது

மாணவர்களுக்கு போதை மாத்திரை விற்பனை – ஆசிரியர் கைது

Published on

களுத்துறை தெற்கில் சில காலமாக பாடசாலை மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபர் கைது செய்துள்ளதுடன் 1,299 போதை மாத்திரைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கணிதம் மற்றும் விஞ்ஞான பாடங்கள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை நடத்துபவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான சந்தேக நபர், களுத்துறையில் உள்ள வீடொன்றில் வாடகை அடிப்படையில் வசித்து வருவதுடன், மாவனெல்லையில் நிரந்தர வதிவிடமாக உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக களுத்துறை தெற்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சில பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை

சில பகுதிகளுக்கு இன்று (17) மாலை 4 மணி முதல் நாளை மாலை 4 மணி வரை மண்சரிவு...

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை ஸ்தாபிக்க அனுமதி

இலங்கை திடீர் விமான விபத்துக்களைப் புலனாய்வு செய்யும் பணியகமொன்றை தாபிப்பதற்கு அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

காணி மீட்புகள், அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் கைது

இலங்கை காணி மீட்புகள் மற்றும் அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாளர் இன்று இலஞ்சம் மற்றும் ஊழல்...