நாடளாவிய ரீதியில் விசேட சுற்றிவளைப்பு!

953

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு நாளை (23) முதல் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

அதற்கமைய, உணவுப் பொருட்களை அதிக விலையில் விற்பனை செய்வோர் மற்றும் பாவனைக்கு உகந்ததற்ற உணவுகளை விற்பனை செய்வோரை தேடி இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படவுள்ளது.

அவ்வாறானவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை அடுத்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here