follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுGI குழாய் வழக்கில் கெஹலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை

GI குழாய் வழக்கில் கெஹலிய உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு பிணை

Published on

2015 ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான 990,000 ரூபா பணத்தை செலவிட்டு, 600 GI குழாய்களை கொள்வனவு செய்து அவற்றை வேறு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் பிரதிவாதிகள் மூவரும் தலா 20,000 ரூபா பெறுமதியான ரொக்கப்பிணை மற்றும் தலா 05 இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பிரதிவாதிகளின் கடவுச்சீட்டை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை வௌிநாட்டு பயணம் மேற்கொள்ள தடை விதித்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

பிரதிவாதிகளின் கைவிரல் அடையாளத்தை பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்ட மேல் நீதிமன்ற நீதிபதி, வழக்கை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உத்தரவிட்டுள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...

எல்ல – வெல்லவாய வீதியை கண்காணிக்க விசேட குழு

எல்ல - வெல்லவாய வீதியின் மலித்தகொல்ல பகுதிக்கு மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளை கண்காணிப்பதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி...