“மக்கள் எழுச்சியை நிறுத்த முடியாது”

327

தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற ஜனாதிபதியின் உரையை தமக்கு நெருக்கமானவர்கள் கைதட்டி பாராட்டினாலும், 220 இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஒட்டுமொத்த பொதுமக்களும் சோகமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இன்று (24) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கு விடயத்தின் தன்மை தெரிந்தால் போராட்டத்தை நிறுத்த முயற்சிக்க மாட்டார் எனவும் அவர் தெரிவித்துள்ளார். தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற ஜனாதிபதியின் உரையை பெரிதாகக் கவனிக்கத் தேவையில்லை என்றார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதியமைச்சர் ஆகியோர் தேர்தலின்றி பதவிகளை விட்டு விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“இந்த நாட்டில் அமைதியான பொதுப் போராட்டங்களுக்கு இடமுண்டு. அதற்கு பலம் கொடுக்கிறோம். அதற்கு தலைமையை வழங்குகிறோம். அவர்களை நிறுத்த அனுமதிக்க மாட்டோம். பொருளாதாரத்தின் திவால் நிலைக்கு எதிராக நாட்டு மக்கள் எழுச்சி பெறுவதை யாராலும் தடுக்க முடியாது. இங்கு வெட்டிப் பேச்சு பேச வேண்டாம்.

நான் மஹிந்த ராஜபக்ஷவின் சீடர் என்று கூறியிருந்தார்கள். நான் மஹிந்த ராஜபக்ஷவின் சீடனாக இருந்திருந்தால் இன்று நான் ஜனாதிபதியாக இருந்திருப்பேன். எனவே நான் எதிர்க்கட்சித் தலைவர் இல்லை. சக்விதிக்கு அரசாட்சி தருவோம் என்று சொன்னாலும் நமது கொள்கைகள் ஏலம் விடப்படாது.”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here