க.பொ.த (சா/த) பரீட்சை குறித்த அறிவித்தல்

715

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, இன்று (27) தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்குறிப்பிட்ட விடயத்தைத் தெரிவித்தார்.

உயர்தரப் பரீட்சை சுமார் ஒன்றரை மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், சாதாரண பரீட்சையை ஏப்ரல் மாத இறுதியில் அல்லது மே மாத ஆரம்பத்தில் நடத்த வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை டிசெம்பர் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் அதற்கும் தயாராக வேண்டும் என்று தெரிவித்த அவர், பரீட்சைகள் சரியான நேரத்தில் நடத்தப்படும் என்று எதிர்பார்பார்ப்பதாக தெரிவித்தார்.

மேலும், சீருடைகள் குறித்து கருத்து தெரிவித்த அமைச்சர், டிசெம்பர் 3ஆம் வாரத்தில் முதல் தொகுதி சீருடைகள் கிடைக்கப்பெறும் என்றும் 70%மான சீருடைகள் சீனாவில் இருந்து பெறப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், புத்தகங்கள் மற்றும் கற்றல் உபகரணங்களில் விலையைக் குறைக்கும் நோக்கில் அவை குறித்த செஸ் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சரவையில் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here