follow the truth

follow the truth

May, 19, 2024
Homeஉள்நாடுசீனாவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

Published on

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் (Jiang Zemin) தனது 96வது வயதில் இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்பு செயலிழப்பால் இன்று(30) உயிரிழந்தார் என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.

Jiang Zemin அவரது சொந்த நகரமான ஷாங்காயில் இறந்தார் என சீன மக்களுக்கு ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி, பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் இராணுவம் மரணத்தை அறிவித்து ஒரு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

“தோழர் ஜியாங் ஜெமினின் மறைவு, நமது கட்சிக்கும், நமது ராணுவத்திற்கும் மற்றும் அனைத்து இன மக்களுக்கும் கணக்கிட முடியாத இழப்பாகும்” என்று கடிதத்தில் கூறப்பட்டு, “ஆழ்ந்த வருத்தத்துடன்” இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.

“எங்கள் அன்பிற்குரிய தோழர் ஜியாங் ஜெமின்” உயர் மதிப்புமிக்க ஒரு சிறந்த தலைவர், ஒரு சிறந்த மார்க்சிஸ்ட், அரசியல்வாதி, இராணுவ மூலோபாயவாதி மற்றும் இராஜதந்திரி மற்றும் நீண்டகாலமாக சோதிக்கப்பட்ட கம்யூனிஸ்ட் போராளி என்று அது விவரிக்கிறது.

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பு துறைமுகத்திற்கு அருகிலுள்ள கட்டிடம் ஒன்றில் தீ பரவல்

கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்துள்ள அதிவேக நெடுஞ்சாலைத் திட்டத்தின் பணியாளர்கள் வசிக்கும் கட்டிடமொன்றில் தீ பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன. சம்பவ...

ஈரான் தூதுவரை தாக்கிய வர்த்தகர் விளக்கமறியலில்

இலங்கையில் ஈரானிய தூதுவரை தாக்கிய கொழும்பை சேர்ந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக கொம்பனித்தெரு பொலிஸார்...

சஜித் – அநுர விவாதம் நடைபெறும் திகதி தொடர்பிலான அறிவிப்பு

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி இடையே முன்மொழியப்பட்ட விவாதங்களுக்கான திகதிகளை பரிந்துரைத்து ஐக்கிய மக்கள்...