சீனாவிடம் இருந்து 7.4 பில்லியன் டொலர் கடன் பெற்ற இலங்கை

595

2021ஆம் ஆண்டு இறுதிக்குள் இலங்கை சீனாவிடம் இருந்து சுமார் 7.4 பில்லியன் டொலர் கடனைப் பெற்றுள்ளதாக  சீன, ஆபிரிக்கா ஆய்வு முனைப்பு அமைப்பு (CARI) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தொகை இலங்கையின் மொத்தக் கடனில் சுமார் 20வீதம் என சீன, ஆபிரிக்கா ஆய்வு முனைப்பு அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை பல சந்தர்ப்பங்களில் அபிவிருத்தி நோக்கங்களுக்காக சீனாவின் எக்சிம் வங்கியின் ஊடாக கடன்களைப் பெற்றுள்ளது.

இதற்கு மேலதிகமாக, அண்மைய நாட்களில் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு சீன அரசாங்கம் 1.5 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான மற்றுமொரு நிதி பரிமாற்ற வசதியை வழங்கியது.

இந்த நிதி பரிமாற்ற வசதி, சீன யுவான் நாணயத்தில், இலங்கை மத்திய வங்கிக்கு அனுப்பப்பட்டது. மேலும் அந்த பணத்தை செலவழிப்பதற்கு பல ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகள் உள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here