follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடுபாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகள் விற்பனை

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகள் விற்பனை

Published on

பாணந்துறை வடக்கு, வாலான பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றின் ஊடாக, பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் கலந்த இனிப்பு வகைகளை விற்பனை செய்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இனிப்பு பானம் மற்றும் லாலிபாப்பில் போதைப்பொருள் கலந்து விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

23 மற்றும் 25 வயதுடைய சந்தேகநபர்கள் 54 இனிப்பு பான போத்தல்கள் மற்றும் 55 வகையான லாலிபாப்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இனிப்பு பானம் மற்றும் லாலிபாப்களுக்கு அடிமையான குழந்தைகளின் பெற்றோரின் புகார்கள் மற்றும் தனிநபரின் ரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து சில காலமாக இத்தொழிலில் ஈடுபட்டு வந்த நிலையில் குறித்த இனிப்பு வகைகளுக்கு அடிமையாகி பிள்ளைகளின் கல்வியில் பாரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய ஏனையோரை கைது செய்வதற்கான விசாரணைகளை பாணந்துறை வடக்கு பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவரும் பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் நாளை வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எதிர்வரும் 6 ஆம் திகதி மதுபானசாலைகளுக்குப் பூட்டு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி மூடப்படும் என...

LTTE வசமிருந்து இராணுவத்தினால் மீட்கப்பட்ட தங்கம், வெள்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் கையளிப்பு

யுத்த காலத்தில் LTTE வசமிருந்து இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட பொதுமக்களின் தங்கம் மற்றும் வௌ்ளி பதில் பொலிஸ்மா அதிபரிடம் உத்தியோகபூர்வமாக...

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் நிறைவு

வாக்கெடுப்பிற்கு நாற்பத்தெட்டு(48) மணி நேரத்திற்கு முன்னர் அதாவது மே மாதம் 03 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப்...