பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் ஆரம்பப்பிரிவு மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்காக விசேட போக்குவரத்து சேவையை ஆரம்பிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று(24) ஊடகங்களுக்கு கருத்துரைத்தபோதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
ஆசிரியர்கள் மற்றும் முன்பள்ளிகளின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இந்த விசேட போக்குவரத்து சேவை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.