உலகின் செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் கொழும்பு

1246

உலகில் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த நகரங்களின் பட்டியலில் கொழும்பு இடம்பெற்றுள்ளது.

லண்டனைச் சேர்ந்த பொருளாதார புலனாய்வு பிரிவு (Economist Intelligence Unit) என்ற ஆய்வு அமைப்பு, உலக நகரங்களை தரவரிசைப்படுத்தி ஆண்டுதோறும் பட்டியல் வெளியிட்டு வருகிறது.

அந்த அமைப்பின் இந்தாண்டுக்கான உலகின் வாழ்வதற்கான செலவு மிகவும் குறைந்த முதல் பத்து நகரங்களில் கொழும்பு இடம்பெற்றுள்ளது.

தரவரிசையில் 161 வது இடத்தில் கொழும்பு இந்தியாவின் பெங்களூருவுடன் இணைந்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவின் சென்னை மற்றும் அஹமதாபாத் மற்றும் பாகிஸ்தானின் கராச்சிக்கு மேலே தரவரிசையில் உள்ளது.

உலகளாவிய டமஸ்கஸ், திரிபோலி மற்றும் தெஹ்ரான் ஆகியவை மிகவும் செலவு குறைவான நகரங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இது அந்த நாடுகளின் பலவீனமான பொருளாதாரம் மற்றும் பணவீக்கத்தை பிரதிபலிக்கிறது.

No description available.

2022 ஆம் ஆண்டில் உலகின் அதிக செலவு கொண்ட முதல் 10 நகரங்கள் இங்கே உள்ளன.

சிங்கபூர் மற்றும் நியூயோர்க் நகரங்கள் உலகின் அதிக செலவு கொண்ட நகரங்களில் முதலாவது இடத்தில் உள்ளன.

இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் அதிக செலவு கொண்ட நகரங்களில் மூன்றாவது இடத்தில் உள்ளன.

ஹொங்கொங் மற்றும் லொஸ் ஏஞ்சல்ஸ் அதிக செலவு கொண்ட நகரங்களில் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

No description available.

சுவிட்ஸர்லாந்தின் சூரிச் அதிக செலவு கொண்ட நகரங்களில் 6 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ஜெனீவா அதிக செலவு கொண்ட நகரங்களில் 7 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

சென் பிராசிஸ்கோ அதிக செலவு கொண்ட நகரங்களில் 8 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

பாரிஸ் அதிக செலவு கொண்ட நகரங்களில் 9 ஆவது இடத்தை பிடித்துள்ளது. பத்தாவது இடத்தில் டென்மார்க், சிட்னி ஆகியன இடம் பிடித்துள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here