‘வைத்தியசாலை ஊழியர்களும் போதைப்பொருளுக்கு அடிமை’

294

போதைப்பொருள் அச்சுறுத்தல் சுகாதார அமைப்பை சூழ்ந்துள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் மன்றம் தெரிவித்துள்ளது.

இன்று சுகாதார ஊழியர்கள் போதைப்பொருள் பாவனையின் பின்னரே தமது கடமைகளை செய்து வருவதாகவும், வைத்தியசாலைகளிலும் போதைப்பொருள் வர்த்தகத்தை ஆரம்பித்துள்ளதாகவும் மன்றத்தின் தலைவர் டொக்டர் ருக்ஷான் பெல்லான தெரிவித்துள்ளார்.

மேலும், போதைப்பொருளுக்கு அதிக அடிமையாக இருப்பவர்கள் மருத்துவமனைகளில் பணிபுரியும் இளநிலை ஊழியர்கள் என்றும், அரசியல்வாதிகளிடம் இருந்து வேலை வாங்கியவர்கள்தான் என்றும் அவர் கூறினார்.

மேலும், இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த பொலிசாரின் உதவியைக் கேட்டாலும், பொலிசாரும் இந்த அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்தாத கொள்கையில் இருப்பதாகவும் அவர் கூறினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here