இலங்கையில் முதல் சர்வதேச விமானம் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 46 ஆண்டுகள்

499

இலங்கையின் முதல் விமான விபத்தாக பதிவு செய்யப்பட்ட டி.சி.08 விமானம் சப்தகன்யா மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (04) 46 ஆண்டுகள் நிறைவடைகிறது.

04 டிசம்பர் 1974 இல், இந்தோனேசியாவின் மார்டினா டி. சி. 08 விமானம் தனது பணியாளர்கள் மற்றும் யாத்ரீகர்கள் குழுவுடன் மக்காவுக்குச் சென்று கொண்டிருந்த போது மஸ்கெலியா லக்ஷபான பகுதிகளை அண்டிய சப்தகன்யா மலைத்தொடரில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விமானம் விபத்துக்குள்ளான போது விமானத்தில் சிப்பந்திகளுடன் 191 பேர் பயணித்துள்ளதுடன், அந்த விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்துள்ளதுடன், இந்த விமான விபத்து இலங்கையின் முதலாவது மற்றும் மோசமான விமான விபத்தாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளான விமானத்தின் டயர் ஒன்று நினைவுப் பரிசாக நோர்டன் பிரிட்ஜ் பொலிஸாருக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ளதுடன், விபத்து இடம்பெற்ற போது எடுக்கப்பட்ட புகைப்படம் மற்றும் டயரை இந்த புகைப்படங்கள் காட்டுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here