ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நோய் அறிகுறிகள் தென்பட்டதால் நேற்று (25) கராப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட ரெபிட் என்டிஜென் பரிசோதனையின்போது அவருக்கு கொவிட் தொற்றிருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அவர் தற்போது சிகிச்சைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.