பரவிவரும் டெல்டா கொவிட் திரிபின் பிறழ்வுகளுக்கு பெயர் சூட்டப்பட்டது

463

இலங்கையில் பரவிவரும் டெல்டா கொவிட் திரிபின் பிறழ்வுகளுக்கு உத்தியோகபூர்வமாக பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, எதிர்ப்பு சக்தி ஆய்வு மற்றும் மரபணு விஞ்ஞான நிறுவகத்தின் பணிப்பாளர் வைத்தியர் சந்திம ஜீவந்திர தமது ட்விட்டர் கணக்கில் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி, 701- S என்ற வைரஸ் திரிபின் உப பிறழ்வானது AY28  எனப் பெயரிடப்பட்டுள்ளது.

இலங்கையில் பரவலடைந்து வரும் டெல்டா உப பிறழ்வின் விஞ்ஞான பெயராக B.1 617 2.28 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் தற்போது இலங்கையில் கண்டறியப்பட்ட 95 சதவீதமான நோயாளர்களுக்கு டெல்டா கொரோனா வைரஸ் திரிபே தொற்றியிருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளதாக வைத்தியர் சந்திம ஜீவந்திர குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here