ஆங்கிலத்தில் சட்டக்கல்லூரி அனுமதி பரீட்சை : வர்த்தமானியை இரத்து செய்ய யோசனை

308

இலங்கையின் சட்டக் கல்லூரி அனுமதிப் பரீட்சைக்கு தனி ஆங்கில மொழியில் தோற்ற வேண்டும் என்பதை ரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் நாடாளுமன்றில் யோசனை ஒன்று முன்வைக்கப்படவுள்ளது என
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இன்று நாடாளுமன்றில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைகக்கு இணங்க இதனை தாம் நாடாளுமன்றில் முன்வைப்பதாக நீதியமைச்சர் தெரிவித்தார்.

சட்டக்கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மாத்திரமே தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானி முன்னாள் நீதியமைச்சர் அலி சாப்ரி, வெளியிடப்பட்டது.

எனினும் இதனை மூன்று வருடங்களுக்கு பின்னர், நடைமுறைப்படுத்துமாறு தாம் விடுத்த கோரிக்கையை, நீதி கல்விச் சபை நிராகரித்துள்ளதாக நீதியமைச்சர் இன்று நாடாளுமன்றில் கூறினார்.

எனவே, பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து தொடரும் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நாடாளுமன்றத்தின் ஊடாக,ரத்துச்செய்ய முடியும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

இதனை மையமாகக்கொண்டே யோசனையை தாம் அடுத்த வாரம் முன்வைப்பதாக அமைச்சர் விஜயதாச தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here