follow the truth

follow the truth

May, 17, 2024
Homeஉள்நாடுவெளிநாட்டு ஊழியர்களால் 3 பில்லியன் டொலர்

வெளிநாட்டு ஊழியர்களால் 3 பில்லியன் டொலர்

Published on

2022ஆம் ஆண்டில் வெளிநாடுகளில் பணிபுரியும் ஊழியர்களிடமிருந்து இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு அதிக பணம் அனுப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

நவம்பர் மாதத்தில் தொழிலாளர்களினால் அனுப்பப்பட்ட பணம் 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இது அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 30 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகமாகும். அக்டோபர் மாதத்தில் இலங்கைக்கு 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன.

2021ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் இது 42 வீதம் அல்லது 113 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பு எனவும் அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில், இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான மொத்த எண்ணிக்கை 3,313.8 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கடந்த நவம்பர் மாதம், உத்தியோகபூர்வ முறைகளை பயன்படுத்தி இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் அந்நிய செலாவணிக்கான புதிய ஊக்குவிப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை மத்திய வங்கி,ஒரு பரிவர்த்தனையின் மூலம் ஒவ்வொரு 20,000 ரூபாய் அல்லது அதற்கு மேல் அனுப்பும் பணத்திற்கும் 1,000 ரூபா ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று அறிவித்தது.

மத்திய வங்கியின் கூற்றுப்படி, உரிமம் பெற்ற வங்கிகள் அல்லது பணம் அனுப்பும் முகவர்களால் விதிக்கப்படும் பரிவர்த்தனை செலவை திருப்பிச் செலுத்தவே இந்த ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

LATEST NEWS

MORE ARTICLES

சடுதியாக அதிகரித்துள்ள எலுமிச்சை விலை

கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தையில் கேரட்டின் விலை அதிகரித்துள்ளதைப் போன்று, நாட்டின் பல பகுதிகளில் இப்போது ஒரு...

இலங்கையில் முதன்முறையாக நிர்மாணிக்கப்பட்ட பசுமை இல்லம்

செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட நவீன தொழில்நுட்பத்துடன் இலங்கையின் விவசாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும், அதற்குத்...

ஞாயிற்றுக்கிழமை விசேட போக்குவரத்து திட்டம்

மாவீரர் தினத்தை முன்னிட்டு போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் 19ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை நாடாளுமன்ற மைதானத்தில்...