உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு

772

இன்று உலக சுற்றுலா தினம் அனுஷ்டிக்கப்படுகின்ற நிலையில், இலங்கையின் அழகை ரசிக்கும் ஒர் ஆத்மார்த்த அனுபவத்திற்காக உலக சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுப்பதாக ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

அந்த செய்தியில் ஜனாதிபதி,

பண்டைய காலம் தொடக்கம் இன்றுவரை, இலங்கையானது – வரலாறு, பாரம்பரியம், சுற்றுச்சூழல் மற்றும் சிறந்த காலநிலைகளைக் கொண்டதான சுற்றுலாத் தீவாக இருந்து வருகிறது.

சுற்றுலாத்துறையானது, நாட்டுக்குப் பல்வேறு சேவைகளை வழங்குவதன் மூலம் பெரும் அந்நியச் செலவாணியை வாரி வழங்குகினாலும், கொவிட்-19 தொற்றுநோய் காரணமாக அது பாரியளவில் இப்போது செயற்படாமல் இருக்கின்றது.

இருப்பினும் உலகில் பல நாடுகள் பயணங்களுக்கான அனுமதியை வழங்கி வரும் இவ்வேளையில், உலகச் சுற்றுலாப் பயணிகளின் கவனம் இலங்கையை நோக்கி தற்போது அதிகரித்துள்ளது.

எனவே, இலங்கையின் சுற்றுலாத் துறையை மீண்டும் வளர்த்தெடுப்பதற்காக எமது அரசாங்கம் தனிமைப்படுத்தல் விதிகளின்படி அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதானது சுற்றுலாத் துறையுடன் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மிகவும் ஆறுதலான ஒரு விடயமாகும்.

இன்றைய நாளில், உலகெங்கும் உள்ள அனைத்து சுற்றுலா பயணிகளையும் இலங்கையின் அழகை ரசிக்க ஒர் ஆத்மார்த்தமான பயணத்திற்கு வருமாறு நான் அழைக்கிறேன் என்று ஜனாதிபதி கேட்டபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here