காற்றின் தரத்தினை காட்சிப்படுத்தும் புதிய உபகரணம்

314

புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டு நாட்டில் வளிமண்டலத்தின் நிலையை அளவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய நகரங்களில் புதிய உபகரணங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்த உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன.

அதன் மூலம், சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள காற்றின் தரம் தானாக அளவிடப்பட்டு, அந்த இடத்தில் நிறுவப்பட்டுள்ள டிஜிட்டல் போர்டு மூலம் அதன் தரவுகளை பொதுமக்கள் பார்க்க முடியும்.

ஓசோன், கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் டை ஆக்சைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் காற்றில் உள்ள தூசித் துகள்கள் உள்ளிட்ட தகவல்கள் இந்தக் கருவிகளால் அளவிடப்படுவதாக மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here