அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து

442

அனைத்து தபால் ஊழியர்களின் விடுமுறையும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

சில தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தம் செய்வதாக அறிவித்ததையடுத்து தபால் சேவைகள் தடையின்றி நடைபெறுவதை உறுதி செய்ய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்தார்.

எனவே அனைத்து ஊழியர்களும் பணிக்கு வருமாறு கேட்டுக் கொண்டார். பல கோரிக்கைகளை முன்வைத்து ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க கூட்டமைப்பு நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த பணிப்புறக்கணிப்பு நள்ளிரவு வரை தொடரும் என கூட்டமைப்பின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார். மத்திய தபால் பரிவர்த்தனையில் தற்போதுள்ள மேலதிக நேர கொடுப்பனவு முறையை திருத்துதல், இடமாற்றம் மற்றும் முறையீடு சபையில் இருந்து தொழிற்சங்கங்களை நீக்குதல் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரிகளுக்கு பலமுறை முறைப்பாடு தெரிவித்தும் எந்த பலனும் இல்லை என அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here