ஹிருணிகாவை கட்சியில் இருந்து வெளியேற்ற சஜித்துக்கு அழுத்தம்…

1392

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தொடர்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர வெளியிட்ட கருத்து ஒன்றுக்கு ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்குள் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

மூத்த அரசியல்வாதியான ரணில் விக்கிரமசிங்கவிற்கு இவ்வாறான கருத்தை வெளியிட்டதற்காக ஹிருணிகா கட்சியில் விமர்சிக்கப்பட்டார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்னிலையில் இந்தக் கருத்தைக் கூறியதால், அந்தக் கருத்து தவறு என்று சஜித் பிரேமதாச கூறாதது குறித்தும் அவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

அடுத்த நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமது எதிர்ப்பை முன்வைக்கப் போவதாகவும், ஹிருணிகா பிரேமச்சந்திர இனி சமகி வனிதா பலவேகய இற்கு தலைமை தாங்கக் கூடாது என்றும் அவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் கடுவெலவில் நடைபெற்ற சமகி வனிதா பலவேகய தொகுதிக் குழுவில், நாட்டின் பாதுகாப்பில் மறைப்பதற்கு ஏதேனும் இருப்பின் அது ரணில் விக்கிரமசிங்கவின் இரண்டு பந்துகள் மட்டுமே என ஆபாச வார்த்தைகளை  தெரிவித்திருந்தையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here