“மக்கள் பொறுமையாக இருக்க வேண்டும்”

310

பொறுமையாக இருக்குமாறும் எதிர்காலத்தில் நிவாரணம் வழங்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அனுராதபுரத்திற்கு விஜயம் செய்த பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் சாதகமான வரவு செலவுத் திட்டம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இது ஒரு நேர்மறையான வரவு செலவுத்திட்டம் என்று நான் நினைக்கிறேன். (நிவாரணம்) எதிர்காலத்தில் கிடைக்கும். தேர்தல் நடந்தால், நாங்கள் அதற்குத் தயாராகிறோம். இன்னும் அத்தகைய நம்பிக்கை இல்லை. நிறைய நேரம் உள்ளது. இருக்க வேண்டும் என்று மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

அரசியல் களத்தில் ரணில் விக்கிரமசிங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் முருகிக்கொன்டாலும் இந்நாட்களில் ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவை ஒன்று சேர்ந்து தேர்தலில் களமிறங்க உள்ளதாக கதைகள் உலாவருகின்றமையினால் மஹிந்தவும் ரணிலுக்கு ஆதராக கதைப்பதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here