பாடசாலை மாணவர்களுக்கு ‘உளவிழிப்புணர்வு‘ நிகழ்ச்சித்திட்டம் அறிமுகம்

471

பாடசாலை மாணவர்களின் தவறான நடத்தையைத் தடுக்க உதவும் கல்வித் திட்டமாக, ஒவ்வொரு பாடசாலையிலும் ஆன்மீகம்,நற்பண்பு, பிரார்த்தனை உள்ளிட்டவற்றை வளர்க்கும் திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளன.

கல்வி அமைச்சரினால் முன்வைக்கப்பட்ட குறித்த பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அதன்படி, 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4 ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 24 ஆம் திகதி வரை ஒவ்வொரு புதன்கிழமையும் ஒரு முன்னோடித் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

அதன் பிறகு, ஒவ்வொரு வாரமும் திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் காலை 7.30 மணி முதல் 7.40 மணி வரை 10 நிமிடங்களுக்கு இத்திட்டம் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here