தேவை ஏற்பட்டால் இரட்டை குடியுரிமையை தியாகம் செய்ய தயார்

761

இலங்கையின் பொதுமக்களின் நலனுக்காக தனது இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்வதன் மூலம் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பல சிரமங்களை எதிர்கொண்டுள்ளதாக முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள தனியார் ஊடகம் ஒன்றுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசிய பசில் ராஜபக்ஷ,

முன்னாள் ஜனாதிபதி மக்களுக்காக தியாகம் செய்ததாகவும், ஆனால் அதன் விளைவாக பல துன்பங்களை அனுபவித்ததாகவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதியை போன்று நீங்களும் இரட்டைக் குடியுரிமையை தியாகம் செய்வீர்களா என தொகுப்பாளர் வினவியபோது,

தேவை ஏற்பட்டால் தனது இரட்டை குடியுரிமையை கைவிட தயாராக இருப்பதாகவும் எனினும், தற்போது அவ்வாறான தேவை இல்லை எனவும் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி பயப்படாமல் இன்னும் சில நாட்கள் பொறுத்திருந்திருந்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை தீர்த்திருக்க முடியும் என பசில் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here