புதிதாக பிறக்கும் சிசுக்களுக்கும் அடையாள அட்டை

1089

இலங்கையில் குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாக்க ஒவ்வொரு குழந்தைக்கும் பிறக்கும்போதே அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் இன்று  நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அச்சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்திய குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் இதனை தெரிவித்தார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், சிறுவர்களுக்கான கொவிட் தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வயது வந்தவர்களுக்கு தடுப்பூசி வழங்கும்போது அவருடைய அடையாளத்தை உறுதிப்படுத்த தேசிய அடையாள அட்டை பயன்படுகிறது. எனவே, இலங்கையை பொருத்தமட்டில் சிறுவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் செயற்பாடு நடைமுறையில் இல்லை இதனால் தடுப்பூசி செலுத்தும் செயற்பாடுகளின்போது  அவர்களை அடையாளப்படுத்துவதில் சிரமம் ஏற்படும் என வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here