IMF உதவி இல்லாவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும்

489

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன் அல்லது இல்லாவிட்டாலும் நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் என மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை பட்டயக் கணக்காளர்கள் சங்கத்தின் வருடாந்த ஆய்வு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மத்திய வங்கியின் ஆளுநர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்

நாம் தற்போது பாரிஸ் கழகம், ஜப்பான் மற்றும் சீனா உள்ளிட்ட எமது இரு தரப்பு கடன் கொடுநர்களிடமிருந்து நிதி உறுதிப்பாட்டை பெறும் நடவடிக்கையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்

அத்துடன், இந்த நடவடிக்கையை மத்திய வங்கி முழுமையாக கைவிட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்தி வெளியாகிய போதும் பேச்சுவார்த்தையை இடைநிறுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கடன் மறுசீரமைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை முன்னெடுத்து வருகிறோம் என்றும் அதனை பூரணப்படுத்தும் முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொள்வதகவும் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்

மேலும் நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு குறுங்கால அல்லது நீண்டகால மறுசீரமைப்பை செய்ய வேண்டும் என்றும் நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here