சட்டவிரோதமாக இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட 16 கிலோகிராம் தங்கம், சுங்கத்திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால்தல்துவ தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட்ட தங்கத்தின் பெறுமதி 220 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளதுடன் தங்கத்தை கடத்திய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.