டயனா கமகேவிற்கு எதிரான பயணத்தடை 5 நாட்களுக்கு நீக்கம்

582

இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு எதிரான வௌிநாட்டுப் பயணத்தடையை தற்காலிமாக நீக்குவதற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதற்கமைய, குறித்த வௌிநாட்டுப் பயணத்தடை 05 நாட்களுக்கு நீக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் 18 ஆம் திகதி, சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணத் தடையை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை கொழும்பு பிரதான நீதவான் நீடித்தார்.

இந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வைத்த கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் ஐந்து நாட்களுக்கு தடையை தளர்த்தியுள்ளது.

அத்துடன், விரிவான விசாரணை அறிக்கையை 2023 ஜனவரி 5 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கொழும்பு பிரதம நீதவான் உத்தரவிட்டார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here