follow the truth

follow the truth

May, 3, 2025
Homeஉள்நாடு'தேர்தலை நடத்த பணமில்லை' - இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

‘தேர்தலை நடத்த பணமில்லை’ – இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர

Published on

உள்ளூராட்சி தேர்தலுக்காக சுமார் 20 இலட்சம் செலவு, பொலிஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண சபை செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என சுமார் 15,000 பேர் ஓய்வு பெற்றுள்ளமையினால் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது பெரும் சவாலாக மாறியுள்ளதாக பொது நிர்வாக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, தேர்தல் நடத்தப்பட்டால், சுமார் 8,700 உறுப்பினர்கள் கொண்ட குழு மீண்டும் தேர்ந்தெடுக்கப்படும் என்றும், அவற்றினை பராமரிக்க 32,000 இலட்சம் பணம் தேவைப்படும் என தெரிவித்திருந்த அவர், நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமா இல்லையா என்று இந்த விடயம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பின் அடிப்படையிலேயே தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

டிசெம்பர் 14ஆம் திகதி ஜனாதிபதி அலுவலகத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதிக்கும் தெரிவு செய்யப்பட்ட 50 உள்ளூராட்சி மன்றத் தலைவர்களுக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றதுடன், தேர்தலை நடத்தினால் கிட்டத்தட்ட இருபது பில்லியன் செலவாகும் என ஜனாதிபதி வலியுறுத்தினார். அரசு ஊழியர்களின் சம்பளம் குறைந்தது மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்பட வேண்டும். அந்த வருமானத்தை ஈட்டுவதற்கு மீண்டும் பொருட்களின் விலையை அதிகரிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி இந்த சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேற்படி உண்மைகளை நிராகரிக்க முடியாது தேர்தலை நடத்தாமல் இருக்க முடியுமா என டெய்லி சிலோன் செய்தி பிரிவின் வினவலுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர, பிரதமரை நீதிமன்றத்திற்கு அழைக்கவும், உச்ச நீதிமன்றத்திற்கு அழைக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் இன்று நள்ளிரவுடன் நிறைவு

தேர்தல் பிரச்சார அமைதி காலம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்றது. இதன்படி, உள்ளூராட்சிமன்ற தேர்தல் தொடர்பான அனைத்து...

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை

காஷ்மீர், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய 06 பேர் சென்னையிலிருந்து வந்த விமானத்தில் இருப்பதாக இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமைய...

டேன் பிரியசாத் கொலை – துப்பாக்கிதாரியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி

டேன் பிரியசாத் கொலை சம்பவத்தின் துப்பாக்கிதாரி என சந்தேகத்தின் பேரில் நேற்று (2) கைது செய்யப்பட்ட நபரை தடுத்து...