கேக்கின் விலை அதிகரிக்கும் – வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம்

393

முட்டை விலை அதிகரித்துள்ளமையால், பண்டிகைக் காலத்தில் கேக்கின் விலையை அதிகரிக்க நேரிடும் என்று அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதிகளவில் முட்டையை உற்பத்தி செய்பவர்கள், சந்தையில் முட்டைக்கு செயற்கைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளமையால் வர்த்தகர்கள் முட்டையை அதிக விலைக்கு விற்பனை செய்வதாக சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நாட்டில் கடும் முட்டைத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தும் நோக்கில், முட்டை உற்பத்தியாளர்களால் சூழ்ச்சிகரமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதனால் முட்டைகளை இறக்குமதி செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இல்லையெனில் பண்டிகைக் காலத்தில் ஒரு கேக் துண்டைக்கூட உண்ண முடியாத நிலை ஏற்படும். ஆகவே, நத்தார் பண்டிகை மற்றும் புதுவருடத்தைக் கருத்திற்கொண்டு அரசாங்கம் முட்டை விலை தொடர்பில் உரிய தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here