follow the truth

follow the truth

May, 22, 2025
Homeஉலகம்மீண்டும் சீனாவில் கொவிட் : 14 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகக்கூடும் என...

மீண்டும் சீனாவில் கொவிட் : 14 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகக்கூடும் என தகவல்

Published on

2023 ஆம் ஆண்டில் சீனாவில் சுமார் 14 இலட்சம் கொரோனா மரணங்கள் பதிவாகக்கூடும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சீனாவில் கடந்த மாதம் தினசரி நோய்த்தொற்று புதிய உச்சத்தைத் தொட்டது.

அதன் விளைவாக, அங்கு நோய் பரவல் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டன. எனினும், அதற்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து, கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளா்த்தப்பட்டு வருகின்றன.A

இந்நிலையில், அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் சீனாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டும் என ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டதிலிருந்து கொரோனா மரணங்களை சுகாதாரத் துறை அறிவிப்பதில்லை.

கடைசியாக டிசம்பர் 3 ஆம் திகதி நிகழ்ந்த கொரோனா மரணங்களே பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் சா்ச்சைக்குரிய ‘Zero-COVID’ கொள்கை தளர்த்தப்பட்டதன் எதிரொலியாக தற்போது கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

காஸாவில் 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்கும் நிலை

அடுத்த 48 மணி நேரத்திற்குள் போதுமான உதவி கிடைக்காவிட்டால், காஸா பகுதியில் உள்ள 14,000 குழந்தைகள் பட்டினியால் உயிரிழக்க...

அரிசி வாங்குவது குறித்து சர்ச்சை கருத்து – ஜப்பானின் விவசாய அமைச்சர் இராஜினாமா

ஜப்பான் விவசாய அமைச்சர் டகு இடொ(Taku Eto), கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், நான்...

கொலம்பியா விமானங்களுக்கு தடை விதித்த வெனிசுலா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த ஜூலை மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றதில் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று...