பயணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

686

யணச்சீட்டு இல்லாமல் ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாளாந்தம் சுமார் 20% பயணிகள் பயணச்சீட்டின்றி பயணிப்பதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ரயில் போக்குவரத்தின் வருமானத்தை அதிகரிப்பதில் இந்த விடயம் பாரிய பாதிப்பை  ஏற்படுத்துவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் முதல் இதுவரையான  காலப்பகுதியில், பயணச்சீட்டு இன்றி பயணித்த 301 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்களிடமிருந்து அபராதமாக 9,31,000 ரூபா அறவிடப்பட்டுள்ளது.

பிரதான ரயில் நிலையங்களில் தொடர்ந்தும் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here